ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லை: மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு ஆட்சியர் மு. கருணாகரன் தலைமை வகித்தார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள்

News image
Updated On :27 ஜனவரி 2014, 9:03 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 21 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு ஆட்சியர் மு. கருணாகரன் தலைமை வகித்தார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். மனுக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி வட்டத்தை சேர்ந்த இயற்கை மரணமடைந்த 4 பேரின் குடும்பத்திற்கு உதவித் தொகையாக தலா ரூ. 12,500 ம், ஒரு பயனாளிக்கு கல்வி உதவித் தொகை ரூ. 2,500 ம், மற்றொரு பயனாளிக்கு கல்வி உதவித் தொகை ரூ. 1,250 ம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 15 பயனாளிகளுக்கு விலையில்லா தேய்ப்பு பெட்டிகள் ஆகியவற்றை ஆட்சியருக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ருக்மணி, கோட்டாட்சியர்கள் சீனிவாசன் (திருநெல்வேலி), பரமசிவம் (சேரன்மகாதேவி), மக்கள் தொடர்பு அலுவலர் க. மாரியப்பன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இரா. இளங்கோ, வட்டாட்சியர் ஜாஹீர்உசேன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.