அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

போலீஸார் தாக்கியதாக கூறி  உண்ணாவிரதம் இருக்க முயன்ற மாற்றுத்திறனாளி

விருதுநகரில் போலீஸார் தாக்கியதாக கூறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற மாற்றுத்திறனாளியை சமதானம் செய்து அனுப்பி வைத்தனர்

Updated On :29 ஜனவரி 2014, 2:28 pm

விருதுநகரில் போலீஸார் தாக்கியதாக கூறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற மாற்றுத்திறனாளியை சமதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    விருதுநகர் அருகே திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன்(35). இவர் ஐ.டி.ஐ பயிற்சி பெற்றுள்ளார். இவரது மனைவி முத்துலட்சுமியுடன் ஆட்டோவில் லட்சுமி காலனியில் உள்ள எம்.பி அலுவலகத்திற்கு வேலைவாய்ப்புக் கேட்டு மனு அளிக்கச் சென்றார்களாம்.

அங்கு யாரும் இல்லாத காரணத்தால் ஓரமாக ஆட்டோவை நிறுத்திவிட்டு ஓட்டுநர் கீழே இற்ங்கி சென்றுள்ளார். உடனே அப்பகுதியில் உள்ள பெண்கள் ஆட்டோவில் காதலர்கள் நெருக்கமாக இருப்பதாக கூறி புகார் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த காவல் ஆய்வாளர் பார்த்திபன் போலீஸாருடன் வந்து தாக்கியதாக கூறப்படுகிறது. அதோடு, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் கணவன் மனைவி என்பது தெரிந்தது.

    பின்னர் அங்கிருந்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்திற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அங்கு வந்த மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் உண்ணாவிரதம் இருக்க முயற்சித்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் சுலைமான் மற்றும் காவல் அதிகாரிகள் ஆகியோர் சமதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.