யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மு.க. அழகிரியைக் கண்டித்து திருவாரூரில் விளம்பர பதாகை

முன்னாள் திமுக தென்மண்டல அமைப்புச் செயலர் மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலினை திட்டியதாக, அவரது தந்தையும் திமுக தலைவருமான மு. கருணாநிதி தெரிவித்திருந்தார். இதற்காக மு.க. அழகிரியை கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டன விளம்பர பதாகை ஒட்டி திமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

News image
Updated On :29 ஜனவரி 2014, 12:52 pm

தங்கராஜா

திருவாரூர் மாவட்டத்தில் மு.க. அழகிரியைக் கண்டித்து விளம்பர பதாகை ஒட்டப்பட்டுள்ளது.

முன்னாள் திமுக தென்மண்டல அமைப்புச் செயலர் மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலினை திட்டியதாக, அவரது தந்தையும் திமுக தலைவருமான மு. கருணாநிதி தெரிவித்திருந்தார். இதற்காக மு.க. அழகிரியை கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டன விளம்பர பதாகை ஒட்டி திமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில், மாவட்ட திமுக மற்றும் இளைஞரணி சார்பில், கொலை மிரட்டல் விடுக்கும் அழகிரியைக் கண்டிக்கிறோம். தலைவரை காப்போம், கழகத்தைக் காப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை மாவட்டம் முழுவதும் ஒட்டி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.