/

வீராணம்ஏரி நிரப்பப்பட்டது: சென்னைக்கு விநாடிக்கு 77 கனஅடி நீர் வெளியேற்றம்

கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரியின் முழுக் கொள்ளளவு 47.50 அடியாகும். தற்போது நீர்வரத்து குறைந்ததால் பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடுவது

News image
Updated On :29 ஜனவரி 2014, 1:08 pm

ஜி.சுந்தரராஜன்

மேட்டூர் அணை மூடப்பட்டதால் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி நீர் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரியின் முழுக் கொள்ளளவு 47.50 அடியாகும். தற்போது நீர்வரத்து குறைந்ததால் பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடுவது மூடப்பட்டது. கோடைக்காலத்தில் சென்னை நீர் கொண்டு செல்ல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழணையிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு நீர் கொண்டு வரப்பட்டு புதன்கிழமை நிலவரப்படி 47 அடி நீர் நிரப்பப்பட்டுள்ளது. ஏரியிலிருந்து தினமும் சென்னை குடிநீருக்கு மட்டும் விநாடிக்கு 77 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஏரிக்கு நீர்வரத்து கிடையாது. மழை பெய்தால்தான் நீர்வரத்து  என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.