சிதம்பரத்தில் மகளிர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் இளைஞர் கைது
சிதம்பரத்தை அடுத்த கே.ஆடூர் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் மகள் சத்தியா (27). இவர் செவ்வாய்க்கிழமை சிதம்பரம் நகருக்கு வந்துவிட்டு பஸ் ஏறுவதற்காக பஸ் நிலையத்தில் நின்றுள்ளார்


சிதம்பரத்தில் ஆசைக்கு இனங்க மறுத்த இளம்பெண்ணை தாக்கிய வாலிபரை நகர போலீஸார் மகளிர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சிதம்பரத்தை அடுத்த கே.ஆடூர் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் மகள் சத்தியா (27). இவர் செவ்வாய்க்கிழமை சிதம்பரம் நகருக்கு வந்துவிட்டு பஸ் ஏறுவதற்காக பஸ் நிலையத்தில் நின்றுள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் (24) என்ற இளைஞர் ஆசை வார்த்தை கூறி ஆசைக்கு இனங்க வலியறுத்தியுள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் சத்தியாவின் முடியை பிடித்து இழுத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சத்தியா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் நகர போலீஸார் மகளிர் வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...