கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தீண்டாமை உறுதிமொழி ஏற்ற ஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவர்கள்

 காந்திஜியின் நினைவு நாளையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியர் வியாழக்கிழமை தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.காந்திஜியின் நினைவு நாளையொட்டி,

News image
Updated On :30 ஜனவரி 2014, 12:45 pm

 காந்திஜியின் நினைவு நாளையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியர் வியாழக்கிழமை தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.காந்திஜியின் நினைவு நாளையொட்டி, பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் அ.சீத்தாலட்சுமி தலைமையில் மாணவர்கள் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக காந்திஜியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும் 6-ம் வகுப்பு மாணவி வீரலட்சுமி தீண்டாமை உறுதிமொழியை வாசிக்க, மெழுகுவர்த்தி ஏந்தி ஏனைய மாணவர்கள் தீண்டாமை உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் தலைவர் அ.சீத்தாலட்சுமி பேசுகையில், இந்திய நாட்டின் விடுதலைக்காக அயராது பாடுபட்டு, இன்னுயிரை ஈந்த, சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவர்கள் தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக, தேசத்தந்தை மகாத்மா காந்தியின் மறைந்த நாளை தியாகிகள் தினமாக கடைபிடிக்கிறோம்.

 சுதந்திர போராட்ட வீரர்களின், வீரச் செயல்களை இன்றைய தலைமுறையினரான மாணவர்களுக்கு தெரிவிப்பதே இதன் நோக்கம். காந்திஜியின் தியாகத்தையும், சேவையையும் நினைவுபடுத்தும் வகையில், இன்று இந்தியா முழுவதும் காலை 11 மணிக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படுகிறது.

நாட்டுக்கு உழைத்த தியாகிகளையும், அவர்கள் கருத்துக்கள் மற்றும் கொள்கைகளை நினைவு கூர்ந்து தியாகிகளின் கனவுகள் நனவாகிட நாம் உழைக்க வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.