அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டி 1-ம் தேதி தொடங்குகிறது

விருதுநகர் மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டி வருகிற 1-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.

Updated On :30 ஜனவரி 2014, 12:43 pm

விருதுநகர் மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டி வருகிற 1-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.

 இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் குறிப்பிட்ட நாள்களில் நடைபெற இருக்கிறது. இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுத் தொகையும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சான்றிதழ்கள் ஆகியவைகள் வழங்கப்படும். அதோடு, மண்டல அளவிலான ஹாக்கி லீக் போட்டியில் பங்கேற்பதற்கு அரசு செலவில அழைத்துச் செல்லப்படுவார்கள்.

எனவே பங்கேற்கவுள்ள அணிகள் போட்டி தொடங்கி நடைபெற இருக்கிற அன்றைய நாளில் பிற்பகல் 1 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஆஜராக வேண்டும். அதோடு, பங்கேற்கிற அணிகள் தங்களது அணியின் பெயரினை விளையாட்டு அலுவலக அலுவலர்களிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.