அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2014, 10:53 am

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் துறை அலுவலர் முனுசாமி முன்னிலை வகி்த்தார். இக்கூட்டத்தில் ஓய்வூதியர் துறை இயக்குநர் எம்.வி.மனோகரனிடம் குறைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர்.

பின்னர் இது தொடர்பாக அவர் பேசுகையில், ஓய்வூதியர்கள் மருத்துவச்செலவு மீளப்பெறுதல் சம்பந்தமான கோரிக்கை வரிசையாக பரிசீலிக்கப்பட்டு அதற்கான காசோலைகள் அந்தந்த ஓய்வூதியதாரர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதேபோல், இங்கு அளிக்கப்பட்ட மனுக்கள் மீதும் குறிப்பிட்ட நாள்களுக்குள் பரிசீலனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு முன்பு பெற்ற 27 மனுக்களில் 22 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவி்த்தார்.

 இக்கூட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கொங்கன், ஓய்வூதிய துறை அலுவலகத்தின் உதவி கருவூல அலுவலர் அசோகன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(கணக்கு) சி.பாண்டியராஜன்,மாவட்ட கருவூல அலுவலர் சிதம்பரம் உள்ளிட்ட அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.