வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த புலி: பெண் தப்பி ஓட்டம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்த புலி அங்கு மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை கடித்து கொன்றது. ஆடுக்குட்டியை தேடி சென்ற பெண் புலியிடம் சிக்காமல் தப்பினார்.

News image
Updated On :31 ஜனவரி 2014, 2:44 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்த புலி அங்கு மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை கடித்து கொன்றது. ஆடுக்குட்டியை தேடி சென்ற பெண் புலியிடம் சிக்காமல் தப்பினார்.

வள்ளியூர் அருகே வடக்கன்குளத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவருக்கு சொந்தமான தோட்டம் கேசவனேரியில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது. இந்த தோட்டத்தில் மக்காச்சோளம், வாழை போன்றவை பயிரிடப்பட்டு்ள்ளது. தோட்டத்தில் நம்பி்பத்து அழகப்புரத்தை சேர்ந்த திருமால், இவரது மனைவி சாந்தி ஆகியோர் தங்கி ஆடு மேய்த்து வருகின்றனர்.

வியாழக்கிழமை சோளத் தோட்டத்திற்குள் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை தேடி சாந்தி சென்றாராம். மேயச்சலுக்கு சென்ற ஆடுகளில் 2 ஆடுகள் கழுத்தில் ரத்தக் காயத்துடன் இறந்து கிடந்ததாம். அப்போது தோட்டத்துக்குள் புலி உறுமும் சத்தம் கேட்டு சாந்தி அதிர்ச்சி அடைந்தார். அங்கிருந்து ஓடிய சாந்தியை புலி விரட்டியதாக கூறப்படுகிறது. மின்னல் வேகத்தில் சாந்தி தப்பி ஊருக்குள் வந்து தகவல் தெரிவித்தார். கேசவனேரி மக்கள் தோட்டத்துக்கு சென்று அங்கிருந்த திருமாலை மீட்டு வந்தனர். தகவலறிந்த திருக்குறுங்குடி வனத்துறையினர் புலியை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.