தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பலாத்கார சம்பவம்: என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்; மே.வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

மேற்குவங்க மாநிலம் பிர்வும் மாவட்டத்தில் கடந்த 24 ஆம் தேதி வேறு ஜாதி வாலிபரை காதலித்தற்காக 20வயது இளம் பெண்ணை

News image
Updated On :31 ஜனவரி 2014, 10:42 am

வேல்முருகன்

மேற்குவங்க மாநிலம் பிர்ஹம் மாவட்டத்தில் கடந்த 24 ஆம் தேதி வேறு ஜாதி வாலிபரை காதலித்தற்காக 20வயது இளம் பெண்ணை கிராமத்தலைவர் உத்தரவுப்படி 13 பேர் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 உச்ச நீதிமன்றம் இந்தவிவகாரத்தை தனாக முன்வந்து விசாரணை நடத்திவருகிறது. இது தொடர்பாக பிர்ஹம் மாவட்ட நீதிபதி பாதிக்கப்பட்ட பெண்ணிண் கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி, உச்ச நீதிமன்றத்தி அறிக்கை அளிக்க வேண்டும் எனறு உத்தரவிட்டது.

இதனையடுத்து விசாரணை நடத்தி நீதிபதி அதன் அறிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்பாக  இன்று தாக்கல் செய்தார்.  அந்த அறிக்கையில் போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து இடம்பெறவில்லை.

இதனையடுத்து போலீஸார்  இந்த வழக்கில் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து  மேற்குவங்க மாநில முதன்மை செயலாளர், இரண்டுவார காலத்திற்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.