போலீஸ் கண்முன்னே அருணாச்சலப்பிரதேச மாணவர் அடித்துக்கொலை: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
தில்லியில் தங்கி படிக்கும் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் நிடோ டேனியம் சக மாணவர்களுடன் டெல்லி லஜ்பத் நகர் மார்க்கெட்டுக்கு வந்தபோது, அவரது முடியைப் பற்றி சிலர்


. தில்லியில் தங்கி படிக்கும் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் நிடோ டேனியம் சக மாணவர்களுடன் லஜ்பத் நகர் மார்க்கெட்டுக்கு வந்தபோது, அவரது முடியைப் பற்றி சிலர் கேலி செய்துள்ளனர்.
இதையடுத்து மாணவர்களுக்கும், அங்குள்ள கடைக்காரர்களுக்குமிடையே அப்போது மோதல் ஏற்பட்டது. இதில் நிடோ டேனியமை சிலர் சுற்றி வளைத்து உருட்டுக்கட்டை மற்றும் இரும்புக் கம்பியால் அடிதது கொலை செய்தனர்
இந்ந சம்பவம் பற்றி தெற்கு தில்லி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. போலீசாரின் கண் முன் மோதல் நடந்தபோதிலும், மாணவனுக்கு பாதுகாப்பு அளிக்க அவர்கள் தவறியதாக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இது போன்ற மனித தன்மையற்ற செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற அவர்,இந்த சம்பவத்திற்கு போலீசார் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
தில்லியில் வடகிழக்கு மாநில மக்கள் மீதான இனவெறி தாக்குதல் அதிகரித்து வருவதாகவும், இந்த கொலை தொடர்பாக எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் தில்லி காவல் துறைக்கு ஆசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மேலும் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...