திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

விசாரணைக்கு அழைத்துச் சென்ற மகனை காணவில்லை:ஆட்சியரிடம் பெற்றோர் புகார்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த பிச்சம்பட்டியைச் சேர்ந்த நாகராஜன்-சரோஜா தம்பதியினர் அளித்துள்ள மனுவில் அவர் கூறியிருப்பது: பிச்சம்பட்டி மாணவி வினிதா கடந்த 23-ம்தேதி கற்பழித்துக்கொலை

Updated On :1 ஜூலை 2014, 9:37 am

விசாரணைக்கு அழைத்துச் சென்ற மகனை காணவில்லை என ஆட்சியர் ச.ஜெயந்தியிடம் பெற்றோர்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு கொடுத்தனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த பிச்சம்பட்டியைச் சேர்ந்த நாகராஜன்-சரோஜா தம்பதியினர் அளித்துள்ள மனுவில் அவர் கூறியிருப்பது: பிச்சம்பட்டி மாணவி வினிதா கடந்த 23-ம்தேதி கற்பழித்துக்கொலை செய்யப்பட்ட நாளில், வினிதா வந்த பேருந்தில் எனது மகன் ஸ்ரீதரன் வந்த காரணத்துக்காக அவரை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். கடந்த 7 நாட்களாக என் கண்ணில் கூட அவரைக் காட்டவில்லை. நான் காவல்துறையினரிடம் பலமுறை என் மகனை விசாரணைக்கு கூப்பிடும்போது உடனே அனுப்புகிறேன் எனக்கூறியும் அவனை என்னிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டனர். என் மகன் உயிருடன் இருக்கிறானா இல்லையா என தெரியவில்லை. எனவே என் மகனை என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுகொள்கிறேன். இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்களிடம் ஆட்சியர் ச.ஜெயந்தி கூறுகையில், காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில்தான் உங்கள் மகனிடம் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் மாவட்ட நிர்வாகம் தலையிடாது. மகனை பார்த்து ஒருவாரத்திற்கும் மேலாகிறது எனக்கூறுவதால், வழக்குரைஞரிடம் ஆலோசித்து காவல்துறையினரை நாடுங்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.