சாமி ஊர்வலத்தில் அரசு பஸ் புகுந்து 2 பேர் சாவு

ஆம்பூர் அருகே மாதனூர் தோட்டாளம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. விழாவையொட்டி வியாழக்கிழமை காலை அம்மன் வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட
Updated on
1 min read

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தோட்டாளம் கிராமத்தில் சாமி ஊர்வலத்தில் அரசு பஸ் புகுந்த விபத்தில் 2 பேர் இறந்தனர்.  2 பேர் படுகாயமடைந்தனர்.

ஆம்பூர் அருகே மாதனூர் தோட்டாளம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. விழாவையொட்டி வியாழக்கிழமை காலை அம்மன் வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மனை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர். சீனிவாசா நகரிலிருந்து தோட்டாளம் நோக்கி ஊர்வலம் சென்றது. சுமார் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலத்தில் சென்றனர்.

ஊர்வலம் தோட்டாளம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது ஒசூரிலிருந்து வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ் சாமி ஊர்வலத்திற்குள் புகுந்தது.பஸ் ஊர்வலத்திற்குள் புகுந்ததால் பக்தர்கள் அலறிக் கொண்டு ஓடினார்கள்.  அதில் சீனிவாசா நகரை சேர்ந்த முருகேசன் (45), ரகு (45) ஆகிய இருவரும் பஸ் சக்கரத்தில் சிக்கினர். முருகேசன் சம்பவ இடத்திலேயே இறந்தாரத். ரகு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். 

படுகாயமடைந்த அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் (57), பார்த்தீபன் (15) ஆகிய இருவரும் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  மேலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.   விபத்து காரணமாக சாமி ஊர்வலம் சென்ற வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டது.  அதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரிசெய்தனர்.  மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com