சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்த வீட்டில் இன்று காலை திடீர் என வெடி விபத்து ஏற்பட்டது.
சிவகாசி முனீஸ்வரன் காலனியை சேர்ந்த முருகன் எனபவர் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்து வந்துள்ளார். மேலும் வெளியில் தாயாரிக்கப்பட்ட சில பட்டாசுகளையும் வீட்டில் வைத்துள்ளார். இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் அந்த வீட்டில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
உராய்வு காரணமாக பட்டாசுகள் வெடித்துள்ளதாகவும் மேலும் வீட்டில் இருந்த சிலிண்டரும் வெடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அருகில் இருந்த 3 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
இந்த விபத்தில் முருகன் மனைவி சங்கரேஸ்வரி (45) படுகாயமடைந்துள்ளார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முருகனின் தாயார் முனியம்மாள் மற்றும் முருகனின் மகன் சரவணன் ஆகியோர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. முருகன் தலைமறைவானார். மீட்பு பணிகள் நடந்து வருகிறது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இளைஞா் அடித்துக் கொலை: மூவா் கைது

திண்டுக்கல்லில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் சாலைப் பேரணி

விருதுநகா் மாவட்ட தோ்தல் அலுவலா்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கில் தமிழுக்கு முக்கியத்துவம்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

