ராஜபாளையத்திற்கு பள்ளிக்குச் சென்ற பிளஸ் 1 மாணவரைக் காணவில்லை: தந்தை புகார்
ஸ்ரீவில்லிபுத்தூர்.ராஜபாளையத்திற்கு பள்ளிக்குச் சென்ற பிளஸ் 2 மாணவரைக் காணவில்லை என தந்தை போலீஸில் புகார் செய்துள்ளார்.


ஸ்ரீவில்லிபுத்தூர்.ராஜபாளையத்திற்கு பள்ளிக்குச் சென்ற பிளஸ் 2 மாணவரைக் காணவில்லை என தந்தை போலீஸில் புகார் செய்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், ஆராய்ச்சிபட்டி சௌண்டியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆ.முருகன் (40). இவரது மகன் திஜித்குமார் (17). இவர் ராஜபாளயைத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வரும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
இந்நிலையில் தனக்கு சரிவர படிப்பு வராததால், பள்ளியில் ஆசிரியர்கள் கண்டிப்பதாக வீட்டில் கூறி வந்துள்ளார். வெள்ளிக்கிழமை காலை முருகன் தனது மனைவியுடன் வெளியூர் சென்றுவிட்டாராம். இரவு 8 மணிக்கு மேல் வீடு திரும்பியுள்ளார்கள்.
வீட்டில் திஜித்குமார் இல்லையாம். பல இடங்களில் தேடியும் மகன் கிடைக்காததையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் முருகன் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...