கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளியில் வந்து 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே பூதம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கந்தவேல்(37). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சத்யபாமா. இவரிடம் வரதட்சணை கேட்டு கந்தவேல் கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது. வரதட்சணை கொடுக்க மறுத்த சத்யபாமாவை கடந்த 2008ஆம் ஆண்டு உயிரோடு தீ வைத்து எரித்து கொலை செய்தார். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து கந்தவேலை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த கந்தவேல், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 6 ஆண்டுகளாக தலைமறைவானார். அவரை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த எஸ்பி ஆராதிகா உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து கந்தவேலை பிடிக்க குறிஞ்சிப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இதற்கிடையில் கந்தவேல் கொத்தவாச்சேரியில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று, அங்கு பதுங்கியிருந்த கந்தவேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிவின் பாலியின் பிரதிச்சாயா ஓடிடி வெளியீடு!
வெற்றிச் செய்தி - கறுப்புச் சட்டம் தோற்கடிப்பு: முதல்வர் ஸ்டாலின்

அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அதானி! ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்!!

அமித் ஷாவைப் பார்த்து சாணக்கியரே வியந்துபோவார்! பிரியங்கா பேச்சால் அவையில் சிரிப்பலை
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

