தேனி, பாரதியார் மெயின் ரோடு, என்.ஆர்.டி. நகரைச் சேர்ந்தவர் ஏ.விஜயராமன். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களின் பிள்ளைகள் ராஜாராம், கணேஷ். விஜயராமன் இறந்துவிட்டார். இவர்களின் நிலம் விருதுநகர், கூரைக்குண்டு கிராமத்தில் 1.63 ஏக்கர் இருந்துள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்காக 1986-ம் ஆண்டு இந்த நிலத்தை அரசு சார்பில் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் நில ஆர்ஜிதம் செய்தார். அப்போது ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் அரசு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இந்த தொகை போதாது என்று கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்றம் சென்டிற்கு ரூ.1200 கூடுதலாக அனுமதித்து ரூ.1,95,600 வழங்க உத்தரவிட்டது. ஆனால் அரசு தரப்பில் இந்தத் தொகை வழங்கப்படவில்லை. இதனையடுத்து ராஜலட்சுமி மற்றும் அவரது பிள்ளைகள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர். 30.2.2012 வரை வட்டியுடன் சேர்ந்து ரூ.12,23,886 அரசு வழங்க நீதிமன்றம் உத்தரதவிட்டது. இதனை சார்பு நீதிமன்றம் கண்காணித்து நிறைவேற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தொகையும் வழங்கப்படாத நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி பிருந்தா கேசவாச்சாரி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியரின் இரு ஜூப்புகள் மற்றும் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டரர்.