விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஊராட்சி ஒன்றிய பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் சரகம், நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா செவ்வாய்கிழமை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ.ஜான் சேவியர்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :15 ஜூலை 2014, 7:01 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் சரகம், நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா செவ்வாய்கிழமை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ.ஜான் சேவியர்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் எஸ்.சந்திரசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) நா.சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா வரவேற்றார். ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து, காமராஜரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து சிறப்புரையாற்றினார்.மாணவ மாணவியரின் 40-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பாக காமராஜர் குறித்து எடுத்துரைத்த 5-ம் வகுப்பு மாணவிகள் மா.இசக்கிராணி, அ.அமலா, 2-ம் வகுப்பு மாணவிகள் சந்தனமாரி, முத்துப்பேச்சி ஆகியோருக்கு ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார்.

மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் பள்ளி கிராம கல்விக் குழுத் தலைவர் அ.கனியம்மாள் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.5-ம் வகுப்பு மாணவர் வேல்முருகன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.