அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பணி நேரத்தில் சிகிச்சை அளிக்க மறுத்து தூங்கியதாக மருத்துவர் மீது புகார்

பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில், பணி நேரத்தில் தூங்கிக்கொண்டு, சிகிச்சை அளிக்க மறுத்த அரசு மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நோயாளி ஒருவர் இருக்கை மருத்துவ அலுவலரிடம் திங்கள்கிழமை

News image
Updated On :21 ஜூலை 2014, 2:43 pm

தர்மராஜ்

பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில், பணி நேரத்தில் தூங்கிக்கொண்டு, சிகிச்சை அளிக்க மறுத்த அரசு மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நோயாளி ஒருவர் இருக்கை மருத்துவ அலுவலரிடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்தார்.

பெரம்பலூர் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் முரளி (39). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கு, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து, சிகிச்சைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு சென்றார். அப்போது, அங்கு பணியிலிருந்த செவிலியர்கள் மருத்துவர் கிரிஷ் தூங்குவதாகவும், 5 நோயாளிகளுக்கு மேல் சிகிச்சை பெற வந்தால் மட்டுமே மருத்துவரை எழுப்ப முடியும், அதுவரை காத்திருக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து, இரவு 2 மணி வரை காத்திருந்த முரளி மீண்டும் செவிலியர்கள்டம் சென்று தாங்க முடியாத வயிற்று வலி உள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, செவிலியர் ஒருவர் முரளிக்கு ஊசி போட்டு காத்திருக்கமாறும், மருத்துவர் தூங்கி எழுந்து வந்தபின் பார்த்துவிட்டு செல்லுமாறு தெரிவித்தாராம். 

தொடந்து, அதிகாலை 3 மணி வரை காத்திருந்தும் மருத்துவர் கிரீஷ் வராததால், நோயாளி முரளி அவரது வீட்டுக்கு சென்றுவிட்டாராம். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இருக்கை மருத்துவ அலுவலரிடம் முரளி திங்கள்கிழமை புகார் மனு அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.