தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மத்தியஅரசை கண்டித்து சிதம்பரத்தில் முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 112 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும், மத்தியஅரசை கண்டித்து சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 112 பேரை

News image
Updated On :21 ஜூலை 2014, 1:52 pm

ஜி.சுந்தரராஜன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும், மத்தியஅரசை கண்டித்து சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 112 பேரை போலீஸார் கைது செய்தனர்.

முற்றுகை போராட்டத்திற்கு தமிழ்த் தேசப்பொதுவுடைமைக்கட்சி பொதுச்செயலாளர்  கி.வெங்கட்ராமன் தலைமை வகித்தார். போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.முகமதுஅஸ்லாம், மதிமுக மாவட்டச் செயலாளர் குணசேகரன், தமிழ்த் தேசப்பொதுவுடைமைக்கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் க.முருகன், தமிழர் தேசிய முன்னணி செ.பழமலை, கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ப.விநாயகமூர்த்தி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆ.ரமேஷ், கோ.வி.தில்லைநாயகம்,

தமிழ்த்தேசப்பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் கு.சிவப்பிரகாசம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் மாவட்டச் செயலாளர் விடுதலைச்செல்வன், தமிழக உழவர் முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம், ஒன்றியச் செயலாளர் தங்க.கென்னடி, தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் வே.சுப்பிரமணியசிவா, தமிழக இளைஞர் முன்னணி துணைச் செயலாளர் ஆ.குபேரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 112 பேரை சிதம்பரம் நகர போலீஸார் கைது செய்து மாலை விடுவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.