அண்ணாமலைப் பல்கலையில் நிலச்சரிவு மேலாண்மை குறித்த பயிலரங்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் இணைந்து பல்கலைக்கழக புவிஅறிவியல் துறையில் நிலச்சரிவு மேலாண்மை குறித்த 5 நாள் பயிற்சி முகாம் திங்கள்கிழமை


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் இணைந்து பல்கலைக்கழக புவிஅறிவியல் துறையில் நிலச்சரிவு மேலாண்மை குறித்த 5 நாள் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. முகாமில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து 36 பேர் பங்கேற்றனர்.
விழாவில் புதுதில்லி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சிறப்பு பேராசிரியரும், காந்தி கிராம பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான எஸ்.ராமசாமி பங்கேற்று முகாமை தொடங்கி வைத்துப் பேசினார். அவர் பேசுகையில் நிலச்சரிவுகள் மலைப்பாங்கான நில பகுதிகளில்தான் அதிகமான தாக்குதலை ஏற்படுத்துகின்றது என்றும், இதனால் அப்பகுதிகளில் மண் அரிப்புகள், பொது உள்கட்டுமானங்கள், நீர்பாசனங்கள், கால்வாய்கள், பாலங்கள் உள்ளிட்டவை அதிக பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்றார்.
கடல் அறிவியல் புல முதல்வர் முனைவர் கே.கதிரேசன் தொடக்க உரையாற்றினார். அவர் பேசுகையில் இந்தியாவில் நடக்கும் நிலச்சரிவு மனிதவளத்தை மட்டுமின்றி தாவரங்களையும், உயிரினங்களையும் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகின்றன. உயர் தொழில்நுட்பம் சார்ந்த அணுகுமுறையின் அவசியம் குறித்தும் விளக்கினார். தேசிய பேரிடர் நிறுவன பயிற்சி இயக்குநர் முனைவர் சூர்யபிரகாஷ் பேசுகையில் இயற்கை அதிகமான சேதத்தை ஏற்படுத்துவதாகவும், ஆகையால் நிலச்சரிவு பாதிப்புள்ளாகும் பகுதிகளை கண்டறிந்து அதில் வெவெற்று வகையான ஆய்வுகளை மேற்கொண்டு ஆபத்தை குறித்தும், பாதுகாக்கும் முறைகளை கண்டறிய வேண்டும் என்றார்.
முன்னதாக புவி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் டி.ராம்குமார் வரவேற்று பேசுகையில் இந்தியாவில் சுமார் 15 சதவீத பகுதி நிலச்சரிவுகள் நிகழும் இடமாக உள்ளது. நிலச்சரிவு மூலம் மக்களின் வாழ்வாதாரம், வாழும் இடம் கட்டமைப்புகள் மற்றும் இயற்கை வளங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்றார். முகாம் அமைப்புச் செயலாளர் முனைவர் எஸ்.வாசுதேவன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...