தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரம் அருகே மீன்பிடித்தவரை, முதலை கடித்தது: முதியவர் படுகாயம்

சிதம்பரம் அருகே உள்ள மேலபருத்திக்குடியைச் சேர்ந்தவர் ஆர்.மாசிலாமணி (60). இவர் செவ்வாய்க்கிழமை மாலை கொள்ளிடம் ஆற்றில் 5 பேருடன் சேர்ந்து இடுப்பளவு நீரில் நின்று கொண்டு மீன் பிடித்துக்

News image
Updated On :22 ஜூலை 2014, 12:52 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடித்தவரை, முதலை கடித்தது. இதில் படுகாயமுற்ற முதியவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சிதம்பரம் அருகே உள்ள மேலபருத்திக்குடியைச் சேர்ந்தவர் ஆர்.மாசிலாமணி (60). இவர் செவ்வாய்க்கிழமை மாலை கொள்ளிடம் ஆற்றில் 5 பேருடன் சேர்ந்து இடுப்பளவு நீரில் நின்று கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது நீருக்கடியில் இருந்த முதலை ஒன்று அவரது வலது காலை கவ்வி குதிறியதால் மாசிலாமணி அலறினார். இதனை பார்த்து அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் முதலையிடமிருந்து காப்பாற்றி அவரை கரைக்கு கொண்டு வந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். வலது காலில் படுகாயம் அடைந்த ஆர்.மாசிலாமணி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.