தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் கைதான வனிதா கடலூர் மத்திய சிறையில் அடைப்பு

சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பா.கணேசன் (31) கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான அவரது காதலி வனிதா (25) புதன்கிழமை இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய

News image
Updated On :24 ஜூலை 2014, 12:00 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பா.கணேசன் (31) கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான அவரது காதலி வனிதா (25) புதன்கிழமை இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பா. கணேசன் செவ்வாய்க்கிழமை இரவு அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரே உள்ள ஸ்ரீசக்கரா அவென்யூ பகுதியில் அவர் வசிக்கு வந்த வீட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கணேசனுடன் தகாத உறவு வைத்திருந்த சிதம்பரம் அருகே உள்ள அம்பலத்தாடிகுப்பத்தைச் சேர்ந்த கலைமணி என்பவரின் மனைவி வனிதா (25) என்ற பெண் இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்தது.

பின்னர் போலீஸார் அவரை கைது செய்து விசாரித்ததில், சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வற்புறுத்தியதன் பேரில் வனிதா, தனது கணவன் கலைமணியிடமிருந்து விவாகரத்து பெற்றதாககவும், இந்நிலையில் கணேசன் தன்னை விட்டு, விட்டு வேறொரு ஒரு பெண்ணை கடந்த ஜூலை 9-ம் தேதி திருமணம் செய்து கொண்ட ஆத்திரத்தில் வனிதா, கணேசனை திட்டமிட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட வனிதாவை புதன்கிழமை இரவு சிதம்பரம் நம்பர்-1 மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் நீதிபதி சுரேஷ்குமார் முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதி, அப்பெண்ணை காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து, வனிதா கடலூர் மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக வனிதாவிற்கு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.