தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தேரோட்டம்! நாளை தீமிதி உற்சவம்

பிரசித்தி பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன்கோயில் ஆடி மாத உற்சவம் ஜூலை 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  ஜூலை 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர் திருவிழா நடைபெற்றது. தேர்,

News image
Updated On :27 ஜூலை 2014, 8:53 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரோட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.

பிரசித்தி பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன்கோயில் ஆடி மாத உற்சவம் ஜூலை 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  ஜூலை 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர் திருவிழா நடைபெற்றது. தேர், கீழசன்னதி நிலையிலிருந்து புறப்பட்டு நான்கு வீதிகள் வழியாக மீண்டும் கீழசன்னதியை அடைந்தது. முன்னதாக நடராஜர் கோயிலிருந்து பொதுதீட்சிதர்கள் பிரசாதத்துடன் வந்து பட்டு சாத்தி, மகா தீபாராதனை செய்த பின்னர் தேர் புறப்பட்டது. பின்னர் மாலை ஸ்ரீமாரியம்மன் தேரில் இருந்து இறங்கி கோயிலுக்கு சென்றார். தேர்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீமாரியம்மனை வழிபட்டனர்.

நாளை தீமிதி உற்சவம்:  ஜூலை 28-ம் தேதி நாளை திங்கள்கிழமை காலை 5 மணி முதல் அங்கபிரதட்சிணம், அலகு போடுதல், பால்காவடி, பாடை பிரார்த்தனை ஆகியவையும், காலை 9 மணிக்கு தீ மிதிப்பவர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 9 மணிக்கு மேல் 10 மணிக்கும் சோதனை கரகம், அலகு தரிசனம் நிகழ்ச்சியும், பகல் 1 மணிக்கும் மேல் 2 மணிக்குள் அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெறுகிறது. ஜூலை 29-ம் தேதி செவ்வாய்க்கிழமை விடையாற்றி உற்சவமும்,  ஜூலை 30-ம் தேதி புதன்கிழமை மாலை மஞ்சள் நீர் விளையாட்டும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவுடைகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் என்.வீராசாமிபிள்ளை, அறங்காவலர்கள் என்.கலியமூர்த்தி, என்.செல்லத்துரை ஆகியோர் செய்துள்ளனர்.

இன்று போக்குவரத்து மாற்றம்: தீமிதி உற்சவத்தை முன்னிட்டு திங்கள்கிழமை பேருந்துகள் பஸ்நிலையத்திற்கு செல்ல முடியாததால், தெற்குவீதி, கீழவீதி சந்திப்பில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து கடலூர் மற்றும் சீர்காழி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையில் இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார். குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை நகரமன்றத் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர், ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் ஆகியோர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.