திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோவிலில் ஆடிப்பூரத் தேரோட்டம்

திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோவிலில் இன்று ஆடிப்பூரத்தேரோட்டம் நடைபெற்றது.
திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோவிலில் ஆடிப்பூரத் தேரோட்டம்
Updated on
1 min read

திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோவிலில் இன்று ஆடிப்பூரத்தேரோட்டம் நடைபெற்றது.

திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோவிலில் கடந்த 21ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடித்திருவிழாவில் 9ம் மண்டகப்படியினை முன்னிட்டு முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத்தேரோட்டம் மிகச்சிறப்பாக இன்று நடைபெற்றது காலையில் அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வேதமந்திரங்கள் பாடி ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் அம்பாளை பக்தக்கோடிகள் தோள்களில் சுமந்து வந்து தேரின் மேல் ஏற்றினர் அதன் தொடர்ச்சியாக வானவேடிக்கை முழங்க பொதுமக்கள் வடத்தை பிடித்து இழுக்க ஆரம்பித்தனர்

10.30 மணியளவில் தொடங்கிய தேர் தெற்குவீதி குளத்துக்கரை மெயின் ரோடு வழியாக 11.20க்கு நிலையை வந்தடைந்தது விழாவிற்கான ஏற்பாடுகளை ஓன்றியக்கவுன்சிலர் ரெ.ஆறுமுகம் ஊராட்சி மன்றத்தலைவர் அ.கருப்பையா அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் குருக்கள் மீனாட்சிசுந்தரம் பொன்னையா குமார் கண்னண் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் தேர்திருப்பணிக்குழு தலைவர் த.புஸ்பராஜ் திருப்பணிசெம்மல் மெ.இராமச்சந்திரன் அதிமுக தலைமை கழகப்பேச்சாளர் போஸ் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரப்செயலாளர் ஆ.முருகேசன் பாஜக கட்சியின் திரவரங்களம் கிளைத்தலைவர் தெட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்

தேரோட்டத்தில் அசோக்நகர் தோப்புக்கொல்லை மேட்டுப்பட்டி வல்லநாடு கீழையூர் வேப்பங்குடி கொத்தக்கோட்டை ஆலங்குடி போன்ற பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டர் முடிவில் சிறப்பான அன்னதானம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com