ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

புத்தக பைகள், நோட்டு, எழுது பொருட்கள் விலை 10 சதவீதம் உயர்வு

பள்ளிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்ததும், ஏப்ரல் மாதம் விடுமுறை விடப்பட்டது. சமீபத்தில் பள்ளி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்வு முடிவுகளையடுத்து, மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு

Updated On :1 ஜூன் 2014, 9:52 am

புத்தக பைகள், நோட்டு, எழுது பொருட்களின் விலை கடந்த ஆண்டை விட 10 சதவீதம் உயர்ந்து உள்ளது.

பள்ளிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்ததும், ஏப்ரல் மாதம் விடுமுறை விடப்பட்டது. சமீபத்தில் பள்ளி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்வு முடிவுகளையடுத்து, மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்ல இருக்கிறார்கள்.தற்போது கோடை விடுமுறை முடிந்து, திங்கள்கிழமை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.  பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களை கவரும் விதத்தில் கடலூர் நகரில் உள்ள கடைகளில் புத்தக பைகள், நோட்டு, புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்கள் குவித்துவைக்கப்பட்டுள்ளன.

மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும், அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார்போலவும் பல வண்ணங்களில், புதுமையாக நோட்டுகள், எழுது பொருட்கள் வந்து உள்ளன.இவற்றை மாணவர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். திங்கள்கிழமை காலை பள்ளிகள் திறக்கப்பட்டதால், ஞாயிற்றுக்கிழமை காலை முதலே நோட்டு புத்தகங்கள் விற்கும் கடைகளில் மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் தங்களின் பெற்றோரையும் அழைத்துக்கொண்டு, அவர்களின் விருப்பத்தையும் கேட்டறிந்து பள்ளி பொருட்களை வாங்கி சென்றனர்.

நோட்டு, எழுது பொருட்கள், புத்தக பைகளின் விலைகள் கடந்த ஆண்டை விட அதிகரித்து உள்ளன. விலையை பொருட்படுத்தாமல், மாணவர்கள் ஆர்வமுடன் கடைகளுக்கு வந்து பிடித்த பொருட்களை வாங்கி செல்கிறார்கள். ரூ.200 முதல் ரூ.2 ஆயிரம் வரை புத்தக பைகள் விற்கப்படுகின்றன. இதில் ரூ.500 முதல் ரூ.800 வரையிலான பைகள் அதிகமாக விற்பனை ஆகுவதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், கடந்த ஆண்டை விட 10 சதவீதம் விலை அதிகரித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சிறுவர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவருக்கும் ஏற்ற வகையில் தனித்தனியாக புத்தக பைகளின் அளவிலும், விலையிலும் மாற்றங்கள் உள்ளன.அதேபோல், நோட்டுகளின் விலையும் ரகத்துக்கு ஏற்ப குறைந்தபட்சம் 5 முதல் 10 சதவீதம்வரை உயர்ந்து உள்ளது. மாணவர்களை கவரும் வகையில் வண்ண வண்ண அட்டைகளுடன் நோட்டுகள் விற்கப்படுகின்றன. பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களின் விற்பனையும் சூடுபிடித்து உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.