விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவிலி. ஸ்ரீவடபத்ரசயன பெருமாள் கோயிலுக்கு ரூ.20 லட்சத்தில் புதிய கொடிமரம்

ஸ்ரீ ஆண்டாள் கோயிலுடன் இணைந்த, ஸ்ரீவடபத்ர சயனர் திருக்கோயில் கோபுரமே, தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக உள்ளது. இக்கோயிலின் கொடி மரம் சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இது

News image
Updated On :1 ஜூன் 2014, 8:59 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவடபத்ரசயன பெருமாள் கோயிலுக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய கொடிமரம் அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ ஆண்டாள் கோயிலுடன் இணைந்த, ஸ்ரீவடபத்ர சயனர் திருக்கோயில் கோபுரமே, தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக உள்ளது. இக்கோயிலின் கொடி மரம் சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இது சேதமுறும் நிலையில் இருந்தது. இதனை அப்புறப்பபடுத்திவிட்டு, புதிய கொடி மரத்தை உபயதாரர் மூலம் அமைக்க கோயில் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது.

திருப்பூர், அமர்ஜோதி தொழில் குழுமங்களின் நிர்வாக இயக்குநர் தொழிலதிபர் டி.ஏ.கல்பஜா பிரேம்சந்தா், இக் கொடி மரத்தை அமைத்துத்தர முன்வந்தார். இதனையடுத்து செங்கோட்டையிலிருந்து வனத்துறையின் ஒப்புதலுடன்  மதிப்புள்ள 50 அடி உயரமுள்ள தேக்கு மரம் வாங்கப்பட்டு, கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு, வேலைகள் கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கியது. தற்போது கொடி மரத்தின் வேலைகள் நிறைவு பெற்றுள்ளது.இந்த கொடி மரத்திற்கு விசேஷ பூஜைகள் கோயில் ஸ்தானிகம் ரங்கராஜன் (எ) ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. பின்னர் கொடிமரம் நாட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இது குறித்து தொழிலதிபர் டி.ஏ.கல்பஜா பிரேம்சந்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த கொடி மரத்திற்கு காப்பர் தகடு அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்றார். நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கி.ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.