சாத்தூர் அருகே மொட்டைமாடியில் போன் பேசி்க் கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதால் படுகாயம் அடைந்த இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
சென்னை கிண்டியில் உள்ள எல்லைமுத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரபு(29). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடன் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சத்திரபட்டியைச் சேர்ந்த கணேசனும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கணேசனின் புது வீடு கிரேக பிரவேஷ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தராம். அதையடுத்து மறுநாள் வீட்டு விஷேச நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
இதையடுத்து திங்கள்கிழமை மாலையில் கருமேகம் சூழ்ந்து சூறைக்காற்றுடன் இடி மின்னல் ஏற்பட்டுள்ளது. அப்போது, மொட்டைமாடிப் பகுதியில் செல்போன் பேசிக் கொண்டிருக்கையில் திடீரென மின்னல் தாக்கியதாம். இதில், காதுப் பகுதி கருகி படுகாயம் அடைந்தாராம். உடனே அங்கிருந்தவர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் பலனின்றி உயிரிழந்தாராம். இது தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வலைதளங்களில் வைரலாகும் நாதக வேட்பாளரின் கையப்பமிட்ட பத்திரம்: அதில் அப்படி என்ன இருக்கிறது?

வாக்குப் பதிவு நாளில் சுற்றுலாத் தலங்கள் மூடல்!

இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு 13% வீழ்ச்சி!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

