ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கூட்டுறவு சங்க வங்கி கடனை ரத்து செய்யக்கோரி கைத்தறி நெசவாளர் ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்ட கைத்தறி நெசவு பாவு பட்டறை தொழிலாளர் சங்கம் சார்பில் குறிஞ்சிப்பாடியில் திங்கள்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் தட்சணாமூர்த்தி தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்டச் செயலர்

Updated On :3 ஜூன் 2014, 10:38 am

கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

கடலூர் மாவட்ட கைத்தறி நெசவு பாவு பட்டறை தொழிலாளர் சங்கம் சார்பில் குறிஞ்சிப்பாடியில் திங்கள்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் தட்சணாமூர்த்தி தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்டச் செயலர் கருப்பையன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட துணைத் தலைவர் ஆளவந்தார், கைத்தறி சங்க மாவட்டச் செயலர் ரங்கநாதன், பொருளாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வங்கி கடன் தொகையை ரத்து செய்ய வேண்டும். கைத்தறி துணிகளை கோஆப்டெக்ஸ் கொள்முதல் செய்ய வேண்டும். கூட்டுறவு சங்க மேலாளரின் ஊதியத்தை அரசே வழங்க வேண்டும். 6 மாதமாக வழங்காமல் உள்ள ஓய்வூதிய தொகையை உடன் வழங்க வேண்டும். குறிஞ்சிப்பாடியில் கைத்தறி பூங்கா திட்டத்தை உடன் துவக்க வேண்டும்.  நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.