கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் வகுப்பறை போராட்டம்: மாணவர்கள்-பெற்றோர்கள் பங்கேற்பு

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கோபாலசமுத்திரம் பகுதி மக்கள் வகுப்பறை போராட்டத்தில் ஈடுபட்டனர். கரும்பலகை வைத்து பாடம் நடத்திய இப் போராட்டத்தில் மாணவர்-மாணவிகள், பெற்றோர்கள்

News image
Updated On :3 ஜூன் 2014, 10:20 am

முத்துகுமார்

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கோபாலசமுத்திரம் பகுதி மக்கள் வகுப்பறை போராட்டத்தில் ஈடுபட்டனர். கரும்பலகை வைத்து பாடம் நடத்திய இப் போராட்டத்தில் மாணவர்-மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் வடக்கூரில் அரசு உதவிபெறும் தனியார் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு தெற்கூர் பகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்-மாணவிகள் படித்து வருகின்றனர். 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட பிரச்னைகளைத் தொடர்ந்து, தெற்கூர் பகுதி மக்கள் தங்களது குழந்தைகளை கல்வி பயில கடந்த 4-11-2013 முதல் அனுப்பவில்லை. தெற்கூரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடத்தப்படும் பள்ளியில் தங்களது குழந்தைகளை கல்வி கற்க செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கோபாலசமுத்திரம் தெற்கூரில் சிறப்புத் தீர்வின் அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி அமைத்து மாணவர்களின் கல்வியைப் பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.இதைக்கண்டித்து திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தெற்கூர் மக்கள் வகுப்பறை போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். கரும்பலகையுடன் வந்த மாணவர்-மாணவிகள், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்களைப் பயின்றனர். அவர்களுடன் ஊர்த் தலைவர் உ.வேலாயுதபெருமாள், மனிதஉரிமைகள் களம் அமைப்பின் நிர்வாகி பரதன் உள்பட மாணவர்களின் பெற்றோர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தகவலறிந்ததும்  மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஜெயக்கண்ணு, பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் மாதவன், பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் பொதுமக்கள் பிரதிநிதிகளுடன், மாவட்ட வருவாய் அலுவலர் பி.உமாமகேஸ்வரி பேச்சுவார்த்தை நடத்தினார். கல்வித்துறை  மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து தெற்கூர் பகுதி மக்கள் கூறியதாவது:கோபாலசமுத்திரத்தில் இருந்து 7 கி.மீ. சுற்றளவிற்கு எந்த அரசு உயர்நிலைப் பள்ளியும் இல்லை. 2 உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் அளவுக்கு மாணவர்-மாணவிகள் எங்கள் கிராமங்களில் இயங்கி வரும் 7 தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படித்து வருகிறார்கள். இவர்கள் உயர்நிலைக் கல்விக்காக 10 கி.மீ. தொலைவில் உள்ள சேரன்மகாதேவி அல்லது மேலப்பாளையத்துக்குச் செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்படுகிறது.  எனவே, எங்கள் கிராமத்திலேயே அரசு உயர்நிலைப் பள்ளிக் கட்டிக் கொடுக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.