நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பழனி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானை

பழனியை அடுத்த கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுயானைகள், காட்டுமாடுகள், மான்கள் என பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.  விலங்குகளுக்கு வேண்டிய நீர்வளம், உணவுப்பயிர்கள்

News image
Updated On :4 ஜூன் 2014, 1:19 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே குடியிருப்பு பகுதிக்குள் ஒற்றை யானை  புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பழனியை அடுத்த கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுயானைகள், காட்டுமாடுகள், மான்கள் என பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.  விலங்குகளுக்கு வேண்டிய நீர்வளம், உணவுப்பயிர்கள் மலைப்பகுதியில் செழிப்பாக உள்ளதால் வனவிலங்குகள் இடம்பெற மனமின்றி இங்கேயே தங்கியுள்ளன.  நிலப்பரப்புக்கு மிகஅருகாமையில் இவைகள் உள்ளதால் அடிக்கடி விவசாய நிலங்களில் புகுந்து வாழை, மக்காசோளம், கரும்பு மற்றும் தென்னை, மா தோப்புகளை சேதம் செய்து விட்டு மீண்டும் வனப்பகுதிக்கு சென்று விடுகின்றன. 

காட்டுயானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் சோலார்வேலி, அகழி அமைத்தாலும் அவை இல்லாத வழிகள் மூலமாக யானைகள் விளைநிலங்களில் ஊடுருவி வருகின்றன.  இந்நிலையில் பழனியை அடுத்த வரதமாநதி அணை வனப்பகுதியில்  ஒற்றை யானை கடந்த சிலநாட்களாக வனப்பகுதிக்கு அருகாமையில் உள்ள தனியார் தோட்டங்களில் புகுந்து பயிர்களையும், மரங்களையும் சேதம் செய்து வந்தது. தற்போது குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பழனி கொடைக்கானல் ரோட்டில் உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது35).  இவர் ஒட்டன்சத்திரம்  வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலராக பணியில் சேர்ந்துள்ளார். மேலும் யானைகள் ஊருக்குள் புகுந்துவிடாமல் தடுக்கும்பணியிலும் அவ்வவ்போது ஈடு பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை கொடைக்கானல் மலைப் பகுதியில் இருந்து  ஒற்றை யானை கீழே இறங்கி குடியிருப்பு பகுதிக்குள் சென்றது. அப்போது மாரியப்பனின் குடிசைக்குள் சென்ற யானை பொருட்களை சேதப்படுத்தியதோடு மேற் கூரையையும் சேதப் படுத்ததியது. இதைக் கண்டு பதற்ற மடைந்த மாரியப்பனும் அவரது தாயும் வீட்டின் பின் புறம் வழியாக வெளியேறினர்.பின்னர் குடிசையில் இருந்து வெளியேறிய யானை அருகே உள்ள தோட்டத்திற்குள் சென்று  அங்கிருந்த மரங்களை நாசம் செய்யதொடங்கியது. இந்த நிலையில் ஒற்றையானை ஊருக்குள் புகுந்த தகவலறிந்த அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர் குடியிருப்பு பகுதிக்குள்ளேயே சுற்றித் திரிந்த யானை காலை 7 மணிஅளவிலேயே அங்கிருந்துசென்றது. யானையால் உயிர்ப் பலி ஏதும் ஏற்படவில்லை. 

வனத்துறை இனியாவது விரைந்து செயல்பட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.