விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 8-ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லை காரணமாக தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி சிகிச்சை பலனின்ற புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இதனையடுத்து அவரது சொந்த கிராமமும், மாணவி படித்த பள்ளியும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு ஒன்றியம், தம்பிபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளியில் தம்பிபட்டி, மாவூத்து சாலையில் உள்ள சடையாண்டி என்பவரின் 14 வயது மகள் தங்கம்மாள் தற்போது 8-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இவர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் 6-ம் வகுப்பு படிக்கும் போது இப் பள்ளிக்கு இடைநிலை ஆசிரியப் பயிற்சி எடுப்பதற்காக இதே கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த நாகராஜ் மகன் சந்திரசேகர் (24) என்பவர் தம்பிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்குச் சென்றுள்ளார். இவர் தற்போது டி.கிருஷ்ணாபுரம், மாரியம்மன்கோயில் தெருவில் குடியிருந்து வருகிறார்
மாணவி தங்கம்மாளை, சந்திரசேகர் தொட்டு பேசி, கிள்ளியும் பழகியுள்ளார். மேலும் அந்த மாணவியை காதலிப்பதாயும் சந்திரசேகர் கூறியுள்ளார். இதனையடுத்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர் சந்திரசேகரை கண்டித்ததுடன், அவரது பெற்றோரிடமும் கூறி கண்டித்துள்ளார்கள்.
இந்நிலையில் மே 31-ம் தேதி (சனிக்கிழமை) ஊர் பொதுக்கழிப்பறை அருகே நடந்து சென்று கொண்டிருந்த மாணவியை, சந்திரசேகர் பிடித்து இழுத்து முத்தம் கொடுத்துள்ளார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், உனக்கும் மற்றொருவருக்கும் தொடர்பு உள்ளது என்று ஊரில் கூறிவிடுவேன் என்று கூறி மிரட்டினாராம்.
இதனால் மனம் உடைந்த மாணவி வீட்டில் தனக்குத் தானே மண்ணெண்னை ஊற்றி தீக்குளி்த்துள்ளார். 90 சதவீதத்திற்கு மேல் உடலில் தீக்காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி தங்கம்மாள் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழன்தார்.
இது தொடர்பாக மாணவி கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் வத்திராயிருப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து சந்திரசேகரை (ஜூன் 1-ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்தனர்
மாணவியின் மரணம் கிராமத்திலும், அவர் படித்த பள்ளியலிரும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுதில்லி மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட கொடுமையைவிட மோசமான துன்புறுத்தல் மாணவி தங்கம்மாளுக்கு நடைபெற்றுள்ளது. இதனை மத்திய மாநில அரசுகள் மிகவும் கடுமையான சட்டங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்களும், அவருடன் படித்த சக மாணவ மாணவியரும் கூறினர்.