கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லையில் 70 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்

தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து, மாநில உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர்,

News image
Updated On :5 ஜூன் 2014, 12:43 pm

முத்துகுமார்

திருநெல்வேலி நகரத்தில் 70 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து, மாநில உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர், கூடுதல் ஆணையர் ஆகியோர் உத்தரவின்பேரில், திருநெல்வேலி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கருணாகரன் சோதனையில் ஈடுபட உத்தரவிட்டார்.

அதன்பேரில் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் காளிமுத்து, சங்கரலிங்கம், இப்ராஹிம் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், திருநெல்வேலி நகரத்தில் உள்ள சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான கிட்டங்கியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருளை எடுத்து பகுப்பாய்வு செய்து, சுமார் 70 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் பி.உமாமகேஸ்வரி முன்பு சுரேஷை ஆஜர்படுத்தினர். விசாரணை நடத்திய மாவட்ட வருவாய் அலுவலர், குற்றஞ்சாட்டப்பட்ட சுரேஷுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்தார். புகையிலை தயாரிப்பு நிறுவனத்திற்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.