சிதம்பரம் நகர அதிமுக துணைச் செயலாளர் வீட்டில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 25 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரொக்கம் ரூ.1.80 லட்சம் திருடுபோனது.
சிதம்பரம் காரிய பெருமாள் கோயில் தெருவில் வசிப்பவர் டேங்க் ஆர்.சண்முகம். நகர அதிமுக துணைச் செயலாளராக உள்ள இவர் வீட்டை பூட்டிக்கு கொண்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு குற்றாலத்திற்கு சென்றார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை சண்முகத்தின் தாயார் அம்புஜம் வீட்டை திறக்கச் சென்ற போது உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததால், சந்தேகமடைந்து, தனது மகன் சண்முகத்திற்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்த சிதம்பரம் நகர குற்றப்பிரிவு போலீஸார் சண்முகம் வீட்டிற்கு சென்று முன்புறக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பின்புறக் கதவை உடைத்து மர்மநபர்கள் வீட்டிற்குள் நுழைந்து பீரோவிலிருந்த 25 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரொக்கம் ரூ.1.80 லட்சம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.
தகவல் அறிந்த டிஎஸ்பி ஆர்.ராஜாராம், இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கடலூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென்னந்தோப்பு காவலாளி வெட்டிக் கொலை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

சேலம் உள்பட 4 மாவட்ட தோ்தல் பணிக்கு எல்லை ஊா்க்காவல் படைவீரா்கள் 527 போ் வருகை

200-க்கும் அதிகமான தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும்: நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


