தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

சிதம்பரம் அருகே உள்ள மணலூர் ஸ்ரீசெல்வ விநாயகர் கோயில் மகாகும்பாபிஷேகம்!

சிதம்பரம் அருகே உள்ள மணலூரில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வவிநாயகர் கோயில் மகாகும்பாபிஷேகம் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது.

News image
Updated On :11 ஜூன் 2014, 12:40 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே உள்ள மணலூரில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வவிநாயகர் கோயில் மகாகும்பாபிஷேகம் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது.

இக்கோயில் சி.சுப்பிராயப்பிள்ளை என்பவரால் 1937ல் முதல் முறையாக திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 1950, 1994-ல் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது 2014 ம் ஆண்டு மீண்டும் திருப்பணி செய்யப்பட்டு புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை ஸ்ரீவிக்னேஸ்வரபூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கி வாஸ்துசாந்தி, ரட்சாபந்தனம், யாகசாலை பிரவேசம், முதல் காலபூஜை, மஹா பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. புதன்கிழமை காலை 2-ம் கால யாகசாலை பூஜை தொடங்கி மகாபூர்ணாஹூதி திபாராதனை, கோ பூஜை நடைபெற்றது. பின்னர் யாகசாலையிலிருந்து கடம் ஊர்வலமாக புறப்பட்டு கோயில் விமானத்தை அடைந்தது.

அங்கு தில்லைவாழ் அந்தனரான உ.வெங்கடேசதீட்சிதர் கடநீரை கோயில் கலசத்திற்கு அபிஷேகம் செய்தும், மகா தீபாராதனை செய்தும் மகாகும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று கும்பாபிஷேக நிகழ்ச்சியை கண்டு தரிசித்தனர். பின்னர் ஸ்ரீசெல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை நிர்வாகி பா.தெய்வநாயகம்பிள்ளை மற்றும் விழாக்குழுவினர், லால்புரம், மணலூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.