கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் மாதந்திர மானியம் வழங்கதால் பொதுமக்கள் அவதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாம் கடந்த 1990ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதில் இலங்கையில் உள்நாட்டு பிரச்சினையின் காரணமாக புலம்பெயர்ந்து வந்த அகதிகள் இங்கு ஆஸ்பெட்டால் சீட்டால் அமைக்கப்பட்ட வீடுகளில் குடியமர்த்தப்பட்டனர் .

Updated On :14 ஜூன் 2014, 7:29 am

புதுக்கோட்டை மாவட்டத்தில் தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாம் கடந்த 1990ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதில் இலங்கையில் உள்நாட்டு பிரச்சினையின் காரணமாக புலம்பெயர்ந்து வந்த அகதிகள் இங்கு ஆஸ்பெட்டால் சீட்டால் அமைக்கப்பட்ட வீடுகளில் குடியமர்த்தப்பட்டனர் .

தற்போது 420குடும்பங்களில் 1700க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களில் ஒன்றான மானியம் வழங்குதலில் குடும்பத் தலைவருக்கு ரூ.1000மும் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.750மும் அதற்கு கீழ்பட்ட குழந்தைகளுக்கு 400 ரூபாயும் வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த மானியத்தை மாத முதல் அல்லது 2ம் தேதியில் வழங்கி வந்தனர். நாளடைவில் 5ம் தேதி வரை தள்ளிபோய் தற்போது 14ம் தேதி வரை வழங்கப்படவில்லை. இதனால் தனியாக உள்ள வயது முதிர்ந்தவர்கள் மானியமும் வரவில்லை மாதந்திர உதவித்தொகையும் வரவில்லை என்ற ஏக்கத்தில் உள்ளனர்.

தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என அகதிகள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.