தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வலியுறுத்தி விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

சிதம்பரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.   மாவட்ட துணைத்தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மாதவன், மாவட்டச் செயலாளர்

News image
Updated On :15 ஜூன் 2014, 11:53 am

ஜி.சுந்தரராஜன்

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்தியஅரசு உடனடியாக அமைத்திட வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிதம்பரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.   மாவட்ட துணைத்தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மாதவன், மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், சிதம்பரம் வட்டத் தலைவர் ஜீவா, பரங்கிப்பேட்டை ஒன்றிய அமைப்பாளர் கருனைச்செல்வம், காட்டுமன்னார்குடி வட்டச் செயலாளர் புகேழந்தி உள்ளிட்ட காட்டுமனனார்குடி, சிதம்பரம் பகுதியில் விவசாய சங்க பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் விவசாயத்திற்கு 12 மணி நேர மும்முணை மின்சாரம் வழங்க வேண்டும், வீராணம் ஏரி மற்றும் வாய்க்கால்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை மராமத்து பணிகள் செய்ய வேண்டும், கான்சாகிப் வாய்காலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூன் 23- ந்தேதி கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.