ஸ்ரீவில்லிபுத்தூரில் மக்கள் கல்வி நிறுனம் சார்பில் பெண்களுக்கான 4 மாத கால இலவச அழகுக்கலைப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில், சத்குரு மாதா அமிர்தானந்தமயி மடம் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மக்கள் கல்வி நிறுவனம், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் பெண்களின் தனித் திறனை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு வருமானம் ஈட்டித்தரக்கூடிய பல்வேறுவிதமான தொழில் பயிற்சிகளை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதியுதவியுடன் வழங்கி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பெண்களின் தனித்திறனை மேம்படுத்தி, அவர்களின் குடும்ப வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் அழகுக்கலைப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.தொடக்க விழாவிற்கு அசேபா திட்டத்தின் திட்ட இயக்குநர் சக்திவேல் தலைமை தாங்கினார். மக்கள் கல்வி நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினரும், அயன்நாச்சியார்கோவில் ஊராட்சி மன்றத் தலைவியுமான சந்திரபிரபா முன்னிலை வகித்தார். மக்கள் கல்வி நிறுவனத்தின் திட்ட அலுவலர் கிருஷ்ணசாமி வரவேற்றார்.மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முத்தையா பயிற்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
நாட்டில் அனைவருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஏற்புடையது அல்ல. நாம் 10 பேருக்கு வேலை வழங்கக்கூடிய இடத்தில் இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் மக்கள் கல்வி நிறுவனம் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண்களுக்கு இதுபோன்ற பயிற்சியை வழங்குவது பாராட்டுக்குரியது. முறையான பயிற்சி எடுத்துக்கொண்டு, தொழில் நுணுக்கங்களையும், வாடிக்கையாளர்களைக் கவரும் தன்மையையும் கற்றுக் கொண்டு ஒவ்வொருவரும் 50 பேருக்காவது வேலைவாய்ப்பு வழங்குவோம் என உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழக அரசு, பெண்கள் முன்னேற்றம் அடைவதற்காக பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி செயல்படுத்தி வருகிறது.
அனைத்து பெண்களும் தொழிலில் முன்னேற்றம் அடைவதற்காக மகளிர் சுய உதவிக் குழுக்களைத் தொடங்கி, குறைந்த வட்டியில் எந்தவித அடமானமும் இல்லாமல் ரூ.5 லட்சம் வரை கடனுதவி மற்றும் மானியம் வழங்கி வருகிறது.
இதனையும் மகளிர் பயன்படுத்தி பயன் பெற வேண்டும் என்றார் அவர்.4 மாதம் நடைபெறும் இந்தப் பயிற்சியில் ஐ புரோ, மணப்பெண் அலங்காரம், மெகந்தி, பிளிச்சிங், சிகை அலங்காரம், பெடிக்கூர், பேசியல், ஆயில் மஜாஜ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சார் பயிற்சிகள் 25 பேருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மக்கள் கல்வி நிறுவனத்தின் பயிற்றுநர் சுபா செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


