கடலூர் மாவட்ட காவல் நிலையங்களில் சிசி கேமரா பொருத்தும் பணி!
கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி, விருத்தாசலம் ஆகிய காவல் கோட்டங்களில் மொத்தம் 52 காவல் நிலையங்கள் உள்ளன. மேற்கண்ட காவல்


கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசி கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி, விருத்தாசலம் ஆகிய காவல் கோட்டங்களில் மொத்தம் 52 காவல் நிலையங்கள் உள்ளன. மேற்கண்ட காவல் நிலையங்களில் கண்காணிப்பிற்காக சிசி கேமரா பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக சிதம்பரம், கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, வடலூர் ஆகிய காவல் நிலையத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு காவல் நிலையத்தில் தலா 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிசி கேமராக்கள் பொருத்தப்படுவதால், காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருபவர்கள் யார், காவல் நிலையத்தில் நடைபெறும் சம்பவங்கள் அனைத்து பதிவாகிவிடும் என போலீஸார் தெரிவித்தனர். காவல் நிலையங்களில் சிசி கேமரா பொருத்தப்படுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...