ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மருந்து லாரி கடத்திய வழக்கில் இருவர் கைது

அண்மையில் ஓசூரிலிருந்து லாரி மூலம் ரூ.60 இலட்சம் மதிப்பிலான மருந்து, மாத்திரை லோடு ஏற்றிக் கொண்டு சென்னை சென்ற லாரி நள்ளிரவு ஆனதால் ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டு கிராமத்தில் உள்ள

Updated On :18 ஜூன் 2014, 10:37 am

ஆம்பூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மருந்து லாரியை கடத்திய வழக்கில் இரு நபர்களை ஆம்பூர் தாலுகா போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

அண்மையில் ஓசூரிலிருந்து லாரி மூலம் ரூ.60 இலட்சம் மதிப்பிலான மருந்து, மாத்திரை லோடு ஏற்றிக் கொண்டு சென்னை சென்ற லாரி நள்ளிரவு ஆனதால் ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டு கிராமத்தில் உள்ள ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே நிறுத்தப்பட்டது.  லாரியின் டிரைவர் ஆற்காடு அருகே மேட்டுக்குடிசை கிராமத்தை சேர்ந்த கந்தசாமி (41) லாரியில் படுத்து உறங்கியுள்ளார்.  நள்ளிரவு நேரத்தில் யாரோ அவரை தட்டி எழுப்பி வழிகேட்பது போல நாடகமாடி 5 பேர் கொண்ட குழுவினர் அவரை கட்டிப்போட்டு லாரியை கடத்திச் சென்றனர்.  வழியில் சாலையோரம் அவரை கீழே தள்ளி விட்டனர்.  போலீஸôருக்கு கிடைத்த தகவலின் பேரில் காவேரிபாக்கம் பகுதியில் போலீஸôர் லாரியை வழிமறித்து பிடித்து லாரியை பறிமுதல் செய்தனர். ஒரேயொரு நபர் மட்டும் சிக்கினார்.  மற்றவர்கள் தப்பியோடி தலைமறைவானார்கள். 

போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த நபர் சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த கண்ணன் (49) என்பது தெரியவந்தது.  அவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னை சண்முகபுரம் பகுதியை சேர்ந்த குமார் (28) மற்றும் கண்ணனை போலீஸôர் கைது செய்தனர்.  தலைமறைவான மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.