மொட்டை மாடியிலிருந்து உருண்டு விழுந்தவர் சாவு
சிதம்பரம் அருகே மொட்டை மாடியிலிருந்து உருண்டு விழுந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் வியாழக்கிழமை இறந்தார்.


சிதம்பரம் அருகே மொட்டை மாடியிலிருந்து உருண்டு விழுந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் வியாழக்கிழமை இறந்தார்.
சிதம்பரம் அருகே உள்ள விபீஷணபுரம் சக்திநகரைச் சேர்ந்தவர் சம்பத் (40). மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக உள்ள இவர் புதிதாக வீடு கட்டியுள்ளனர். இந்த வீட்டில் சம்பத் புதன்கிழமை மதுஅருந்திவிட்டு வீட்டு மொட்டை மாடியில் படுத்து தூங்கியுள்ளார். சுற்றுப்புற கைப்பிடிச்சுவர் இல்லாததால், சம்பத் தூக்கத்தில் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமுற்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை சம்பத் இறந்தார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...