என்எல்சியில் பணிநிரந்தம் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஒப்பந்த தொழிலாளர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
என்எல்சி இன்கோசர்வ் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கம் சிஐடியூ ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகி சக்கரபாணி தலைமையில் நெய்வேலி சிஐடியூ அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. தொமுச ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பழனிவேல், ஸ்டாலின், பாட்டாளி ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகி ரவிச்சந்திரன், அண்ணா தொழிலாளர் ஊழியர்கள் ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் ரகுராமன், தொழிலாளர் வாழ்வுரிமை சங்கம் சார்பில் திருநாவுக்கரசு, சிஐடியூ தொழிற்சங்க பொருளாளர் சீனுவாசன் பேசினார்.
கூட்டத்தில் சமவேலைக்கு சம ஊதியம், பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26 மற்றும் 27 ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் நெய்வேலியை சுற்றியுள்ள 40 கிராமங்களில் தெருமுனை பிரசாரம் நடத்துவது. மேலும் 28ஆம் தேதி மாலை மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்தில் தர்ணா போராட்டமும், அதன் முடிவில் வேலைநிறுத்த அறிவிப்பு குறித்தும் தெரிவிக்க முடிவு செய்திருப்பதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பவழ மல்லி பாடல்!

ஏப்.19-ல் இலங்கை செல்கிறார் குடியரசுத் துணைத் தலைவர்!

திருமாவளவனைப் பாராட்டிய அன்புமணி! ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒன்றாகப் போராடவும் உறுதி!!

திமுகவின் தோ்தல் அறிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும்: சிபிஐ மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

