தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

வெளிநாட்டினர் தங்கியிருப்பது குறித்த தகவல் தெரிவிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு கூட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக லிபரா ஹாலில் பல்கலைக்கழத்தில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகள் மற்றும் விடுதி உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

News image
Updated On :20 ஜூன் 2014, 2:05 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக லிபரா ஹாலில் பல்கலைக்கழத்தில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகள் மற்றும் விடுதி உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ஏ.ராதிகா தலைமை வகித்தார். தேசிய தகவல் மைய அதிகாரி குப்புசாமி கூட்டத்தில் பங்கேற்று வெளிநாட்டின் தங்கியுள்ளது குறித்து வீடு உரிமையாளர்கள் மற்றும் விடுதி உரிமையாளர்கள் தேசிய தகவல் மையத்தில் பதிவு செய்ய வேண்டயதின் அவசியம் குறிததும், ஆன்லைன் மூலம் பதிவு செய்வது எப்படி, தேசிய தகவல் மைய முகவரியில் உறுப்பினராவது எப்படி என்பது குறித்து விளக்கமளித்தார். இக்கூட்டத்தில் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

தகவல் தெரிவிக்காவிடில் 5 ஆண்டுகள் சிறைதண்டனை: ஏ.ராதிகா எஸ்பி எச்சரிக்கை

கூட்டத்திற்கு பின்னர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ஏ.ராதிகா செய்தியாளர்களிடையே தெரிவித்து: கடலூர் மாவட்டத்தில் சுமார் 600 முதல் 700 பேர் வரை வெளிநாட்டினர் தங்கியுள்ளனர். வெளிநாட்டினர் தங்கியுள்ளது குறித்து அந்த வீட்டு உரிமையாளர் மற்றும் விடுதி உரிமையாளர்கள் 24 மணி நேரத்தில் அருகாமையில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவித்து பதிவு செய்ய வேண்டும். சட்டவிரோதமாக வெளிநாட்டினர் தங்கியிருப்பதை தடுக்கும் பொருட்டு பதிவு செய்யப்படுகிறது. பதிவு செய்யாவிடில் வீடு மற்றும் விடுதி உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என ஏ.ராதிகா எஸ்பி தெரிவித்தார்.

வீடு மற்றும் விடுதி உரிமையாளர்களுக்கு அழைப்பு இல்லை!

விழிப்புணர்வு கூட்டம் குறித்து வெளிநாட்டு மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில்  தங்கியுள்ள வீடு உரிமையாளர்கள் மற்றும் விடுதி உரிமையாளர்களுக்கு சரியான முறையில் தகவல் தெரிவிக்காததால், ஒரு சில உரிமையாளர்களே கூட்டத்திற்கு வந்திருந்தனர். கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளும், பல்கலைக்கழக ஊழியர்களுமே மட்டுமே இக்கூட்டத்தில் பங்கேற்றதால் இக்கூட்டம் பெயரளவிற்கே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.