வேலைக்குச் செல்லச் சொன்னதால் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கணவரை வேலைக்குச் செல்லுங்கள் என்று அறிவுரை கூறிய மனைவியை, அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸார் கைது செய்தனர்


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கணவரை வேலைக்குச் செல்லுங்கள் என்று அறிவுரை கூறிய மனைவியை, அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸார் கைது செய்தனர்
.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கோட்டையூரைச் சேர்ந்தவர் பெ.மாரியப்பன் (49). இவரது மனைவி பசுபதி (38). மாரியப்பன் வேலைக்குச் செல்லாமல் தினமும் மது குடித்துவிட்டு ஊதாரித்ததனமாக சுற்றித் திரிந்துள்ளார். இதனைக் கண்ட மனைவி, வேலைக்குச் செல்லச் சொல்லி புத்திமதி கூறியுள்ளார். இதில் ஆத்திரமுற்ற மாரியப்பன், மனைவியை ஆபாசமாகப் பேசி அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் அவர் காயமுற்றார்.வத்திராயிருப்பு போலீஸில் மனைவி பசுபதி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாரியப்பனைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...