மனைவி பிரிவால் கணவன் தற்கொலை
பழனி நடேசன் தெருவைச் சர்ந்தவர் ஜெகன்னாதன்(39), முன்னாள் நகர தே.மு.தி.க. பொருளாளரான இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சங்கீதா(35), மகன் சதீஸ்


பழனியில் மனைவி பிரிவைத் தாங்காத தனியார் கல்லூர் ஊழியா் தற்கொலை செய்துகொண்டார்.
பழனி நடேசன் தெருவைச் சோந்தவர் ஜெகன்னாதன்(39), முன்னாள் நகர தே.மு.தி.க. பொருளாளரான இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சங்கீதா(35), மகன் சதீஸ்(9), குடும்ப பிரச்சனை காரணமாக ஜெகன்னாதன் கடந்த 8 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால், அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் ஞாயிற்றுக்கிழமை மனமுடைந்து தென்னைமர வண்டுகளை அழிக்க பயன்படுத்தப்படும் மாத்திரைகளை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் பழனி அரசு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை இறந்தார்.
இச்சம்பவம் குறித்து, பழனி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...