கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லையில் குடிநீர்த் தட்டுப்பாடு: கோட்ட மேலாளரை கருப்புக்கொடியுடன் முற்றுகையிட்ட ரயில்வே ஊழியர்கள்

திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு  40-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இங்குள்ள பணிமனையில் (பிட்லைன்) தினமும் 3-க்கும் மேற்பட்ட ரயில்கள் கழுவி சுத்தம் செய்யப்படுவதோடு

News image
Updated On :25 ஜூன் 2014, 11:06 am

முத்துகுமார்

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் நிலவி வரும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்கக்கோரி, கருப்புக்கொடியுடன் ரயில்வே ஊழியர்கள் மதுரை கோட்ட மேலாளரை புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு  40-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இங்குள்ள பணிமனையில் (பிட்லைன்) தினமும் 3-க்கும் மேற்பட்ட ரயில்கள் கழுவி சுத்தம் செய்யப்படுவதோடு, பழுதுகள் நீக்கி பராமரிக்கப்படுகிறது. இப் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கான தண்ணீர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏற்றுவதில் எலக்ட்ரானிக்கல் பிரிவினர் தாமதம் செய்து வருவதாக புகார் எழுந்தது. இதைக்கண்டித்து கடந்த சில நாள்களுக்கு முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி புதன்கிழமை வந்தார். குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கக்கோரி கருப்புக்கொடியுடன் ரயில்வேயின் பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் அவரை முற்றுகையிட்டனர். ஏ.ஐ.எஸ்.சி. எஸ்.டி. தொழிற்சங்க கிளைத் தலைவர் பி.செல்லையா, டி.ஆர்.இ.யூ. கிளைத் தலைவர் ராஜு, ஏ.ஐ.எல்.ஆர். எஸ்.ஏ. மண்டல நிர்வாகி நாராயணன், எஸ்.ஆர்.ஏ.யூ. தொழிற்சங்க நிர்வாகி மணி, ஏ.எல்.ஓ.பி.சி. தொழிற்சங்க நிர்வாகி பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன், மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத்தொடர்ந்து ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதுகுறித்து ஊழியர்கள் தரப்பில் கூறுகையில், திருநெல்வேலி ரயில் நிலையத்தில் குடிநீர்ப் பிரச்னை மட்டுமல்லாமல், தொழிலாளர் விரோதப் போக்கில் ஈடுபட்டு வரும் 2 ஊழியர்களை இடமாற்றம் செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளோம். ரயில்வேயில் அங்கீகாரம் பெற்ற சங்கத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தொழிலாளர்களுக்கு பல்வேறு இடையூறு அளித்து தங்களது சங்கத்தில் இணைக்கும் வகையில் செயல்படுகிறார்கள். தவறுகளுக்கான தண்டனைகளையும் வேறுபடுத்துகிறார்கள். மதுரை கோட்டத்தில் மட்டும் நிகழ்மாதத்தில் 4 பேர் வரை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஊதிய உயர்வு கிடைக்காமல் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்கிறார்கள். இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகமும், மத்திய அரசும் முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.