பழனியில் காணொலி மூலம் பக்தர்கள் காத்திருக்கும் அறை திறப்பு
பழனி திருக்கோயில் சார்பில் மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல மூன்று வின்ச் இயக்கப்பட்டு வருகிறது. வின்ச்சில் பயணம் செய்ய பக்தர்கள் வெளியே காத்திருக்கும் நிலையை தவிர்க்க


பழனியில் காணொலிக் காட்சி மூலம் பக்தர்கள் காத்திருக்கும் அறை திறந்து வைக்கப்பட்டது.
பழனி திருக்கோயில் சார்பில் மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல மூன்று வின்ச் இயக்கப்பட்டு வருகிறது. வின்ச்சில் பயணம் செய்ய பக்தர்கள் வெளியே காத்திருக்கும் நிலையை தவிர்க்க திருக்கோயில் நிர்வாகம் சார்பில் வின்ச் நிலையம் அருகிலேயே சுமார் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக பக்தர்கள் காத்திருக்கும் அறை கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் காத்திருக்கும் வகையில் இருக்கைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டிடம் கட்டப்பட்டது.
இதை தமிழக முதல்வர் வியாழக்கிழமை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். விழாவை முன்னிட்டு காத்திருக்கும் அறை முழுக்க மின் விளக்குகளாலும், மாவிலை தோரணங்களாலும், வாழை மரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முதலமைச்சர் திறந்து வைத்தவுடன் திருக்கோயில் சார்பில் கட்டிடத்துக்கு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, அர்ச்சகர்கள் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை செய்தனர். பின்னர் புதிய கட்டிடத்தில் பக்தர்கள் அமரவைக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம், மேலாளர் மாயாவு, ரவி, கண்காணிப்பாளர் வடிவுக்கரசி, உதவிப் பொறியாளர் முத்துராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...