விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவிலி.யில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 45 புதிய தமிழகம் கட்சியினர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் மறியலில் ஈடுபட முயன்ற புதிய தமிழகம் கட்சியினர் 45 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

News image
Updated On :27 ஜூன் 2014, 7:57 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் மறியலில் ஈடுபட முயன்ற புதிய தமிழகம் கட்சியினர் 45 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

ரயில் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். தென் மாவட்டங்களில் தலித்கள் மீது நடைபெறும் வன்முறை தாக்குதலை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் புதிய தமிழகம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.டி.கண்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை ஏராளமான கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இவர்கள் ரயில் நிலையத்திற்குள் சென்று மறியல் செய்ய முயன்றபோது, போலீஸார் இவர்களைக் கைது செய்தனர்.

போராட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி பொறுப்பாளர் ராஜலிங்கம், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் வழக்குரைஞர் பவுல்ராஜ், வத்திராயிருப்பு மேற்கு ஒன்றியச் செயலாளர் பாரதிராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் சீனிவாசன், நகரச் செயலாளர் திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.