ஸ்ரீவில்லிபுத்தூரில் அம்மா உணவகத்திற்கு பூமி பூஜை
ஸ்ரீவில்லிபுத்தூரில் அம்மா உணவகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நகராட்சி ஆணையாளர் கே.பழனிவேல் தலைமையில் நடைபெற்றது.


ஸ்ரீவில்லிபுத்தூரில் அம்மா உணவகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நகராட்சி ஆணையாளர் கே.பழனிவேல் தலைமையில் நடைபெற்றது.
பொறியாளர் எஸ்.முருகன், நகர் நல அலுவலர் மதியழகன், இளநிலை பொறியாளர் கோமதிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் வி.டி.முத்துராஜ் ஆகியோர் அம்மா உணவகத்திற்கான புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் நகர் அ.தி.மு.க. பொருளாளர் கருமாரி எஸ்.முருகன், அரசு வழக்குரைஞர் எம்.ஜெகதீசன், மாவட்ட வழக்குரைஞர் பிரிவுச் செயலாளர் அ.மங்களசாமி, நகர்மன்ற துணைத் தலைவி சரோஜா, நகர்மன்ற உறுப்பினர்கள் மீரா தனலட்சுமி, அ.மகேஸ்வரன், பிரேமா, மாரியம்மாள், பாப்பா, பூமாரி, கடற்கரைச்சாமி, நடராஜன், முனியப்பன், பாலசுப்பிரமணியன், அங்குராஜ் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நகராட்சி அலுவலகத்தை ஒட்டியுள்ள, நகராட்சிக்குச் சொந்தமான 2400 சதுர அடி இடத்தில் அம்மா உணவகம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. 3 மாதங்களுக்குள் பணிகள் நிறைவு பெறும் என்று நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...