சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிறுவனத்தில் பட்டப் படிப்பு, வேலை வாய்ப்புப் பயிற்சிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து கல்லூரி முதல்வரும் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளருமான இரா.தனஞ்செயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிறுவனம், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பி.காம். (கூட்டுறவு மேலாண்மை), பி.ஏ. (ஆங்கில இலக்கியம்), பி.சி.ஏ. போன்ற பட்டப் படிப்புகளையும், எம்.பி.ஏ., எம்.காம். போன்ற பட்ட மேற்படிப்புகளையும் வார இறுதி நாள்களில் மட்டும் வகுப்புகள் நடைபெறும் வகையில் நடத்தி வருகிறது.
இந்த பட்ட, பட்ட மேற்படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப வினியோகம் நடைபெற்று வருகிறது. அதேபோல், பிளஸ்-2, பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான 36 வார முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கும் விண்ணப்ப வினியோகம் நடைபெறுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 23-ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.
அதேபோல் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கான ஓராண்டு சமையல் கலை கைவினைஞர் பயற்சியில், அரசு கலந்தாய்வு மூலம் 50 சதவீத இடங்கள் இலவசமாக நிரப்பப்பட உள்ளன. இப்பயிற்சியில் சேர ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இது குறித்த மேலும் விவரங்களுக்கு அம்மாப்பேட்டை, காமராஜர் காலனியில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிறுவனத்தை நேரிலோ, 0427 - 2240944 என்ற தொலைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்! காரணம் என்ன?

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

